
மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில், சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் சுவாச பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படும் 10 முதல் 15 அடி நீளம் உள்ள சிலிண்டர்களை திருடி சென்றனர். இதனால் செயற்கை சுவாசம் தடைப்பட்டது. இதன் காரணமாக 20 பச்சிளம் குழந்தைகள் மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆக்ஸிஜன் தடை பட்ட சில நிமிடங்களில், அலாரம் ஒலித்தது.
இதையடுத்து டாக்டர்களும், தொழில்நுட்ப ஊழியர்களும் அங்கு விரைந்து சென்று குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதே நேரம் தொழில்நுட்ப உதவியாளர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை குறித்து ஆய்வு செய்தனர். அப்போது ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும் செம்பு குழாய்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக வேறு சிலிண்டர்கள் மூலம் அந்த குழந்தைகளுக்கு சுவாசம் வழங்கப்பட்டது. இதனை அறிந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதட்டம் அடைந்தனர். இதனால் அவர்களிடம் அந்த மருத்துவமனையின் தலைமை டாக்டர் மற்றும் குழந்தைகள் நல டாக்டர், பெற்றோர்களிடம் பயப்பட வேண்டாம் நிலைமையை சரி செய்து விட்டோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.