
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு பெண் Google Meet வழியாக நேர்காணலில் பங்கேற்கும்போது, தனது மொபைல் ஃபோனில் AI கருவி மூலம் கேள்விகளுக்கான பதில்களை நேரடியாக பெற்றுக்கொண்டு அதை வாசிப்பது போன்று காணப்படுகிறது. ‘InterviewSidekick’ எனப்படும் நிறுவனம் இந்த கருவியை விளம்பர விடியோவாக வெளியிட்டாலும், இந்த செயல் நேர்மையற்றது என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. “Interview பண்ணுறவர்கள் முட்டாள்கள் இல்ல” என ஒரு பயனர் கூறியிருந்தார்.
View this post on Instagram
இந்த வகை AI கருவிகள் வேலைவாய்ப்பு நேர்காணல்களில் நேர்மையைக் குறைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஒரு முறை மோசடி பண்ணலாம், ஆனா எப்போதும் முடியாது… உண்மையா, உங்க திறமையால வேலை வாங்குங்க” என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது AI தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு துறையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அதன் நல்லது மற்றும் கெடுதல் பற்றி பரபரப்பான விவாதங்களை கிளப்பி வருகிறது.