‘கின்னஸ் உலக சாதனை’ என்பது மனிதர்களாலும், இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படும் சாதனையை குறிக்கின்றது. இந்த சாதனைகள் அனைத்தும் ஒரு புத்தகத்தில் இடம் பெறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு சாதனைகளை மிகவும் குறைவான நேரத்தில் முடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். அந்த வகையில் இத்தாலியில் வசிக்கும் மரியா லம்புக்னானி என்பவர் தனது கைகளால் முட்டைகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ஒரு நிமிடத்தில் 52 முட்டைகளை முழங்கை மூலம் உடைத்து, கின்னஸ் சாதனை படைத்தார். மேலும் வழக்கத்திற்கு மாறாக அவர் கைகளை பின்பக்கமாக மடக்கி முட்டைகளை உடைத்தார். அது சாதனை என்று கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அன்று இத்தாலியின் மிலன் நகரில் நடந்த ‘லோ ஷோ டீ ரெக்கார்ட்’ நிகழ்விலும் இவர் கலந்து கொண்டு இந்த குறிப்பிடத்தக்க முட்டையை உடைத்து சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.