சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும். குழப்பமாக உள்ளதா? சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றுகின்றார்.

குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் கொடியை அவிழ்ப்பார். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டு விழாக்களுக்கு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையும் ஏற்றுவதாக தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியை குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி கம்பத்தில் கீழிருந்து ஏற்றப்பட்டது.

அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக இன்றும் கீழிருந்து கம்பத்தில் கொடி ஏற்றப்படும். குடியரசு தினமான ஜனவரி 26 மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது கொடி மூடப்பட்ட கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் அதை மேலே ஏற்றாமல் அவிழ்த்து விடுவார். மேலும் குடியரசு தினமான இன்று முதல் முறையாக இந்திய குடியரசுத் தலைவர் ஆன திரௌபதி முர்மு கொடியை ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.