மேற்கு வங்காளத்தின் மிட்நாப்பூரில் ஏற்பட்ட ஒரு கொடூர சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டில் அமைதியாக நடந்த யானையின் வாலைப் பிடித்து இழுத்து, பின்னர் கற்கள் எறிந்து தாக்கும் வீடியோ ஒன்று அனைவரின் மனதை வருத்தமடையச் செய்துள்ளது.

https://www.instagram.com/reel/DPyEJFiCGUW/?igsh=MXFyNGk2c2JuYXA5ZA==

இந்த செயலை சிலர் சிரித்தபடி வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளனர். காட்சிகளில், காட்டின் வழியாக அமைதியாக சென்ற யானையை ஒருவர் பின்னால் சென்று வாலை இழுப்பதைக் காணலாம். திடீரென ஏற்பட்ட தாக்குதலால் யானை பயந்து திரும்பிப் பார்த்து ஓட தொடங்குகிறது.

குற்றவாளி ஓடி தப்பிச் சென்றாலும், பிறர் கற்கள் எறிந்து விரட்டுவதைக் காணலாம். வனத்துறையினரின் தகவலின்படி, உணவுக்காக யானைகள் கூட்டமாக அருகிலுள்ள கிராமத்துக்கு வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாம்.

இந்த வீடியோவைக் கடும் கண்டனத்துடன் பலர் IFS அதிகாரிகள் மற்றும் வனத்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். “விலங்குகள் பேச முடியாததால் தான் இவர்கள் பயங்கரம் செய்கிறார்கள்” என்று ஒருவரும், “மிருகம் யார்?” என வேதனையுடன் பலரும் கூறியுள்ளனர்.

விலங்கு பாதுகாப்பு அமைப்புகளும் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கூச்சலுடன், இந்த வீடியோ சமூகத்தில் மனிதத்தன்மையின் தேக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.