இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு அதுதான் வசதியாக இருக்கும். தினந்தோறும் ரயிலில் லட்சக்கணக்கானோர் செல்லும் நிலையில் முன்பதிவு செய்து கொண்டு செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஐ ஆர் சி டி சி இணையதளம் முடங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த இணையதளம் முடங்கியுள்ளது.
இந்தியன் ரயில்வே நிர்வாகம் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பராமரிப்பு பணிகள் காரணமாக irctc சேவை கிடைக்காது என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றால் 14646, 0755-6610661 என்ற செல்போன் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம். இல்லையெனில் [email protected] என்ற இணையதள முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் சூப்பர் செயலியை மேம்படுத்துவதால் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது