உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருக்கும் மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் மொராதாபாத்தில் வசிக்கும் நிடா என்ற பெண், தனது கணவர் எஜாசல் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது, நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சம்பல் பகுதிக்கு சென்றேன்.
மேலும் எனக்கு அங்கு சில வேலைகள் இருந்தது. இதனால் நான் அங்கு செல்வது பாதுகாப்பானதா என்று சம்பல் சம்பவம் தொடர்பான வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் கணவர் ஏன் வீடியோவை பார்க்கிறாய் என்று கேட்டார். அதன் பின், இது தவறு என்று கூறிவிட்டு நீங்கள் காவல்துறையினர் செயலை ஆதரிக்கிறீர்கள் என்று கூறி என்னிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் இனி உன்னை வைத்திருக்க மாட்டேன் என்று கூறி விவாகரத்து என தெரிவித்தார். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது. மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்