
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக, ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலானது பார்சின் மிலிட்டரி காம்ப்ளஸ் தளத்தில் உள்ள டேல்கான் 2 ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலின் போது 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய f35 ‘ADIR’ ஸ்டெல்த் ஃபைட்டர் விமானங்கள் 2000 கிலோ மீட்டர் பயணித்தது. அதோடு ஈரான் பகுதிக்குள் புகுந்து 3 கட்டங்களாக தாக்குதல் நடத்தியது. எனினும் இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறுத்து வந்தது. இந்நிலையில் டேல்கான் 2 கூடம் செயல்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சி திடமான அமாட் நியூக்ளியர் புரோகிராமில் இந்த டேல்கான் 2 ஒரு அங்கமாக உள்ளது. ஆனால் செயல் இழந்ததாக கூறப்படும் டேல்கான் 2 தளத்தில் கடந்த ஆண்டு ஆராய்ச்சிகளை மீண்டும் தொடங்கியதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் தெரிவித்தன. இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அந்த தளம் தகர்த்தப்பட்டதாக கூறப்படுவது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.