
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் பங்கு பெற்றார்கள். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உட்பட 182 வீரர்கள் 639.15 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டார்கள்.
இந்த தொடருகான அட்டவணை ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அட்டவணை உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7:30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மேலும் மார்ச் 23 (ஞாயிறு) சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.