பிருத்வி ஷா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான டி20 லீக், அதாவது ஐபிஎல் அதன் வரவிருக்கும் 2024 சீசனை நோக்கி நகர்கிறது. ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலமும் விரைவில் நடைபெறவுள்ளது. இதனிடையே ஐபிஎல் அணிகளும், வீரர்களும் தங்களை தயார்ப்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ப்ரித்வி ஷாவும் போட்டிக்கு முன்னதாக பயிற்சியைத் தொடங்கினார், ஆனால் அவரது பயிற்சியைப் பார்த்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர்.

பிருத்வி ஷாவின் உடற்தகுதியைக் காரணம் காட்டி ரசிகர்கள்கிண்டல் செய்தும், அறிவுரை வழங்கியும் வருகின்றனர். ஷா தனது ஃபிட்னஸ் காரணமாக ட்ரோலுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் அவரது ஃபிட்னஸ் குறித்து ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர். பிருத்வி ஷா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் டெல்லி கேபிடல்ஸ் ஜெர்சி அணிந்து வலையில் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

பிருத்வி ஷா பயிற்சியில் நிறைய நல்ல ஷாட்களை விளையாடினார், ஆனால் ரசிகர்கள் அவரது ஆட்டத்தை விட அவரது உடற்தகுதியின் மீதுதான் கவனம் செலுத்தினர். ஒரு ரசிகர், ‘பிரித்வி பார்ட் சைம் கிரிக்கெட் வீரராகவும், ஃபுல் டைம் ஃபுட் வ்லோகர் (vlogger) போலவும் இருக்கிறார்’ என்று கூறினார். மேலும் அவர் பேட்டிங்கை விட உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும், அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிருத்வியை அணியில் தக்கவைத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் தக்கவைத்த வீரர்கள் :

ரிஷப்பண்ட், டேவிட் வார்னர், பிருத்வி ஷா, அபிஷேக் போரல், அக்சர் படேல், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், யாஷ் துல், பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால், என்ரிச் நோர்கியா, லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், கலீல் அகமது,
இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்.

டெல்லி கேப்பிட்டல்ஸால் வெளியிடப்பட்ட வீரர்கள் :

ரீலி ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிப்பிள் பட்டேல், சர்ஃபராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.