
ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ரன்கள், நூறு விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகளைப் பிடித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைப் போலவே ஃபில் சால்ட், ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரது கேட்சுகளைப் பிடித்து இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுவரை எந்த ஒரு வீரரும் படைத்ததில்லை.