ஐசிசி சர்வதேச நடுவர் குழுவின் உறுப்பினர் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி(41) திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் ஒட்டுமொத்த ஐசிசி சர்வதேச கிரிக்கெட் சமூகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதுவரை ஷின்வாரி 25 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இவர் கடந்த டிசம்பர் 2017 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இவரது இழப்பு சர்வதேச கிரிக்கெட்டிற்கு மிகப்பெரியதாகும். அவர்  கிரிக்கெட் துறைக்கு ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை இவரைப் போன்றவர்களை கிரிக்கெட் சமூகம் இழந்து விடுகிறது.

இந்த இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம். மேலும் அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என ஐசிசி தலைவர் திரு ஜெய் பிஸ்மில்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.