திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் எம்பி திருச்சி சிவா ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. திருச்சி சிவாவின் காரை அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதோடு காவல் நிலையத்திற்குள் புகுந்தும் சேரை தூக்கி அடித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வருகிறது. கலைஞர் இருந்திருந்தால் இது போன்று நடக்க வாய்ப்பு இல்லை. திமுக தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறியுள்ளார்.