தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீராஞ்சேரி கிராமத்தில் உவமை காளியம்மன் கோவில் பால்குட விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மண்ணி ஆறு பாலம் அருகே அரச மரத்தடியில் இருந்து பால்குடம், காவடி எடுத்து சொல்வதற்காக பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வானவெடிகள் வெடிக்கப்பட்டதால் அரசமரம், மாமரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் பால்குடம் எடுக்க காத்திருந்த பக்தர்களை ஓட ஓட விரட்டி கடித்தது.

இதனால் சச்சின், ஜெயஸ்ரீ, ஹரிஹரன், பாலமுருகன் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.