இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1:0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேயில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதி ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியின் போது பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் செய்யும் போது சஞ்சு சாம்சனின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே சாம்சனுக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மாவை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது.

அதேபோல ஹர்ஷல் படேலுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார். கடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 41 ரன்களை வாரி வழங்கியதால் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்திய அணியின் ப்ளேயிங் XI :

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (WK), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (து.கே), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங்,  உம்ரான் மாலிக், சிவம் மாவி.

இலங்கை அணியின் ப்ளேயிங் XI :

தசுன் ஷானகா (கேப்டன்), பதும் நிஷாங்கா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, குசல் மெண்டிஸ் (வி கீ), பானுக ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் மதுஷங்கா, கசுன் ராஜிதா.