1987 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்தவர்கொனேரு அம்பி. இவர் ஓர் இந்திய சதுரங்க வீராங்கனை .   இவர்  இந்த விளையாட்டின் விரைவான ஆட்ட வாகையாளர் என்ற பிரிவில் உலக சாம்பியன் ஆவார்.  2002 ஆம் ஆண்டு, 15 வயதில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்து, உலக சதுரங்க வரலாற்றில், மிக இளம் வீராங்கனை என்ற வரலாற்றை உருவாக்கினார். ஆண்களின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்த, முதல் இந்திய பெண்மணியும் இவரே ஆவார். 2006 தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக, தனிப்பட்ட போட்டியில் தங்கத்தை வென்ற இவர், கலப்பு அணியிலும் இணைந்து விளையாடிபோது, அவரின் அணி தங்கம் வென்றது.

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ருசியா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இதன் பெண்கள் பிரிவு போட்டி 12 ரவுண்ட் கொண்டதாகும். இதில் மொத்தமாக 122 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்திய வீராங்கனையான இவர் கடைசி ரவுண்டில் சீனாவின் டான் ஜோங்கியை வீழ்த்தி, டிசமபர் 2019-இல் பெண்கள் பிரிவின் கிராண்ட் மாஸ்டர் விருதை வென்றார்.

விளையாட்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசு அருச்சுனா விருது அளித்தது. மேலும், 2007ஆம் ஆண்டு, இந்திய அரசின் உயர்ந்த குடி விருதான, பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றபோது, இவருக்கு 20 வயது கூட இல்லை. இந்நிலையில் இவருடைய பிறந்த தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.