கேரள மாநிலத்தில் பிறந்து தென்னிந்திய மக்கள் மனதில் தன்னுடைய வசீகரமான குரலால் பாடி நீங்கா இடம் பிடித்த சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருடைய மாயக் குரல் ஜாலம் தமிழில் 90களில் ஆட்சி செய்தது என்றே சொல்லலாம். நூற்றுக்கணக்கான பாடல்களை தொண்ணூறுகளின் ஆரம்ப முதல் இறுதி வரை பாடி அசத்தியிருக்கிறார். இவரை 90க்களின் மெலோடி குயின் என்றும் இவரை சொல்லலாம்.

புதிய முகம் படத்தில் வரும் நேற்று இல்லாத மாற்றம் என்ற பாடல் அப்படியே காதல் ரசம் சொட்ட சொட்ட பாடியிருப்பார். 2000 ஆம் வருடத்தின் ஆரம்பத்திலும் இவருடைய மவுசு குறையவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக 2001 ஆம் வருடம் வெளிவந்த தில் படத்தில் வரும் உன் சமையல் அறையில் பாடல் இவருடைய மாயக் குரலின் ஜாலம் நிறைந்திருக்கும். இவரைப் பொருத்தவரையில் ஏ ஆர் ரகுமான் இசையில் தான் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் வரும் புது வெள்ளை மழை என்ற பாடலை பாடி ரசிகர்களின் நெஞ்சத்தை தன் வசப்படுத்தினார். சுஜாதா தேவாவின் இசையிலும் பட பாடல்களை பாடியிருக்கிறார். அந்த நேரத்தில் பல ஹிட் பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான். இவருடைய பிறந்த நாள் மார்ச் 28ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக இவருக்கு வாழ்த்துக்களை கூறுவது வழக்கம்.