
இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி ஓஹியோ கவர்னர் பதவிக்கான போட்டியில் உள்ள போது அவரிடம் ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. அந்தப் பழைய நேர்காணல் வீடியோ சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் விவேக் ராமசாமி தனது வீட்டில் ஒரு பத்திரிக்கையாளரிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் காலில் காலணி அணியாமல் வெறும் காலுடன் அமர்ந்து பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து பலரும் “நாகரிகம் இல்லாதவர். வெறுங்காலுடன் பேட்டியில் அமர்ந்துள்ளார். விவேக் கல்வி அறிவு பற்றி எங்களுக்கு போதிக்கிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் விவேக் ராமசாமிக்கு ஆதரவாக “தனது சொந்த வீட்டில் காலணி அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. அது அவருடைய சொந்த வீடு இது குறித்து ஏன் அனைவரும் கவலைப்படுகிறார்கள்? “என கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த வீடியோவுக்கு விவேக் ராமசாமி பதில் அளித்துள்ளார். “நமது அமெரிக்க கலாச்சாரம் சிறப்பை விட, வெறும் சாதாரண தன்மையை அதிக மதிப்பிடுகிறது” என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்க் உடன் இணைந்து அரசாங்கத்துறையை வழி நடத்த ராமசாமியை தேர்ந்தெடுத்தார் இருப்பினும் ராமசாமி அந்த பொறுப்பிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.