திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அதிமுககாரன் அதுக்கு முட்டு கொடுத்து நிக்குறான்.  என்ன தப்பு ?  இந்தியா என்கிற பெயர் காலம் காலமாக  இருக்கிறது. அந்த பெயரை நம்முடைய கூட்டணிக்கு ”இந்தியா” என்று வைத்தவுடன்,  மோடி இந்தியாவினுடைய பெயரை ”பாரத்” என்று மாற்றுகிறார். என்னை பொறுத்தவரை சந்தோசம் தான். காரணம் என்னோடைய ஒரிஜினல் பெயர் ”பாரத்” ஆக நான் வாழ்க என மோடி சொல்கிறார்.

காரணம் 1947-ல் ஆகஸ்ட் 15 நான்  பிறந்த காரணத்தினால் ? என்னுடைய பெற்றோர்கள் எனக்கு ”பாரத்” என்று தான் பெஉயர் வைத்தார்கள். ஆனால் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற  கொள்கை இந்த கட்சிக்கு இருப்பதால், நான் இந்த கட்சிக்கு வந்ததினாலே ”பாரத்” என்ற பெயரை பாரதி என மாத்திக்கிட்டேன். இதேபோல ஒவ்வொருவருக்கும் இந்த கட்சியில் வரலாறு இருக்கிறது.

அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி ”பாரத்” என்ற பெயரை மாற்றினால்  என்ன தப்பு ?அதில் என்ன தவறு என்று கேட்கிறார் ? சரி ஒன்னும் ஆட்சேபனை இல்லை. உன் கட்சிக்கு என்ன பெயர் ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தானே பெயர் வச்சி இருக்க… உண்மயிலே சோத்துல உப்பு போட்டு திக்கிறவனா இருந்தா….   மானம், சூடு, சொரணை, இருந்தா….

ஒரு படி மேலேயே  போய் கேட்குறேன்.  நீ உண்மையிலேயே எம்ஜிஆர்_யை நேசிக்கிறேனவனாக இருந்தால் ”பாரத்” என்ற பெயரை மாறும் என்ற நம்பிக்கை இருந்தால்… அனைத்திந்திய அண்ணா திமுக என்பதை அனைத்து பாரத் திமுகா என்று வச்சிக்கோ. மானங்கெட்டவர்கள்… சொரணை  கெட்டவர்கள்….  இன்றைக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் முடிவு கட்டுவதற்கு நம்முடைய இளைஞர்கள் தயாராக வேண்டும் என தெரிவித்தார்.