பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. இதில் விசேஷம் என்னவென்றால் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  முதல் முறையாக அவர் உரை ஆற்றுகின்றார்.

பொதுவாக குடியரசுத் தலைவருடைய உரை என்பது அரசின் உடைய பார்வையை பிரதிபலிப்பாகவும்,  அரசினுடைய கொள்கை முடிவுகள்,  அரசு என்ன மாதிரியான திட்டங்களை,  சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது, அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு நேரடியாக தெரிவிக்கின்ற வகையிலே  அமைந்திருக்கும்.

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மன்றத்திலே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  அவர்கள் உரையாற்றுவார்கள். சுமார் ஒரு மணி அல்லது 1:30 மணி நேரம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வருகை தந்த குடியரசு தலைவரை பிரதமர், சபாநாயகர் வரவேற்றனர்.சற்றுமுன் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற தொடங்கினார்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையில்,

உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகின்றோம். 2047 ஆம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும். நாட்டின் இளைஞர்களும், பெண்களுக்கும் முன்னிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறி உள்ளது என தெரிவித்தார்