இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நல்ல ஆலோசனைகளை மாவட்ட செயலாளர்களுக்கு…  ஒரு பூஸ்ட்டை கொடுத்துள்ளார். ஒரு தலைவன் அதைத்தானே செய்யணும்.

அந்த தலைவன் இன்னைக்கு உழைத்தவர்களுக்கு நல்ல மரியாதை, பாராட்டுதல் கொடுத்திருக்கிறார்.ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அம்மாவும் அதே மாதிரி தான்…  தலைவரும் அப்படித்தான். இதுமாதிரி பாராட்டு தெரிவிப்பாங்க. அதே மாதிரி ஒரு பாராட்டுதலை எங்களுடைய பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி மிகச் சிறப்பாக எங்களை பாராட்டினார்.

நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கியிருக்கிறார். பூத்து கமிட்டி, மகளிர் குழு, பாசறை எல்லாம் முறையாக அமையுங்கள். கழகத்திற்கு அதுதான் மிகப்பெரிய வலுவை உருவாக்கும்.இளைஞர்கள் அதிகமாக ஈர்க்கணும். புதிதாக வருபவர்களுக்கு பொறுப்பு கொடுங்க. கழகம் இன்னைக்கு நல்லா வளர்ச்சி பெற்று இருக்கு. மாநாடு மிகப்பெரிய எழுச்சி பெற்றிருக்கு.

இந்த மாநாட்டை பார்த்து எல்லோரும் வியந்து பார்த்திருக்காங்க. இந்த மாநாட்டை இந்தியா மட்டுமல்ல, இந்தியாவே உற்று நோக்கி பார்த்து இருக்கிறது. நம்முடைய இயக்கம் பிரிச்சி போச்சி.. அது இதுன்னு சொன்னதெல்லாம், மறைச்சி,  இந்த இயக்கம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்கு. இப்படி ஒரு இயக்கம் இருக்கா அப்படின்னு எல்லாரும் ஆச்சரியப்படுற மாதிரி இந்த மாநாடு அமைஞ்சிருக்கு. அதுக்காக பாடுபட்ட உங்க அனைவருக்கும்…  கிளைச் செயலாளரில் இருந்து,  மாவட்ட செயலாளர் வரைக்கும்.. தலைமை கழக நிர்வாகிகள் வரைக்கும்…  அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என் தெரிவித்தார்.