
திருச்சியிலிருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சுமார் 1 மணி நேரமாக வானில் வட்டமடிக்கிறது. விமானத்தின் சக்கரங்கள் இழுக்கப்படாததால், தரையிறங்க முடியாமல் இருக்கிறது.
விமானத்திற்கான எரிபொருள் குறைந்த பிறகு அவசர தரையிறக்கம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் சுமார் 141 பயணிகள் இருந்தனர்.