இன்றைய போட்டியில் சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக இந்த வீரர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

2023 உலகக் கோப்பையைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது இந்திய அணி.. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எளிதாக வீழ்த்தியது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் முதல் தொடர் டி20 வடிவத்தில் விளையாட உள்ளது. இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஞாயிற்றுக்கிழமை,  அதாவது இன்று தொடங்குகிறது. டி20 தொடரில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கூட சூர்யா தான் அணியை வழிநடத்தினார். அந்த தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றியது. சூர்யகுமார் கேப்டன்சியின் அதே வடிவத்தை தக்கவைக்க முயற்சிப்பார். ஆனால் இந்த தொடருக்கு முன் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு சிக்கல் உள்ளது.

அதாவது, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகிய 3 வீரர்களில் சூர்யகுமார் யாதவ் யாரை உட்கார வைப்பார் என்பது தான் கேள்வி. யார் விளையாடுவார்கள்? யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடி தொடக்கம் கொடுத்தார். அதேபோல அந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக பேட்டிங் செய்தார். கெய்க்வாட் ஒரு சதம் உட்பட 5 போட்டிகளில் 223 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 138 ரன்கள் எடுத்தார்.  

சூர்யகுமார் யாரைத் தேர்ந்தெடுப்பார்?

ஜெய்ஸ்வால் – ருதுராஜ் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிரமத்தை அதிகரித்தனர். முன்னதாக இந்த 2 பேட்ஸ்மேன்களும் இந்தியாவுக்காக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் சுப்மன் கில் நீண்ட காலமாக இந்திய அணிக்காக ஓபன் செய்து வருகிறார். கில்லும் நல்ல பார்மில் உள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. எனவே இன்றைய போட்டியில் ஆடுவது உறுதியாகத்தான் தெரிகிறது.

அணி நிர்வாகம் என்ன நினைக்கும்?

இப்போது கேள்வி என்னவென்றால், தொடக்கத்தில் இடது-வலது கலவையை அணி விரும்புகிறது. இந்திய அணியும் இதே எண்ணத்தில் உள்ளது. எனவே ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறுவது உறுதி என்று கருதப்படுகிறது. இரண்டாவது தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்படுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், விளையாடவில்லை. எனவேருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அணி நிர்வாகம் இடது-வலது கலவைகள் அல்லாமல் யோசித்தால் கில் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் ஓப்பனிங் செய்வதைக் காணலாம்.