துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி 11 வது முறையாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்று உள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதியுடைய அணிகள் ஆகும். இந்த ஆட்டத்தில் “ஏ” பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி எட்டு முறை சாம்பியன்ஷிப் பெற்று முதல் முறையாக லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. இதில் டாஸை வென்று பாகிஸ்தான் முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் தரப்பில் விளையாடிய ஷாஜாய்ப் கான் 159 ரன்கள் எடுத்த அதிரடியாக விளையாடினார்.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து முடித்தது. அதன் பின் இந்தியா தரப்பில் சமந்த் நாகராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 42.1 ஓவர்களில் விக்கெட்டை இழந்து 238 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 43 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக 67 ரன் எடுத்து நிகில் குமார் சிறப்பாக ஆடினார். பாகிஸ்தான் அணியின் அலி ராசா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஜப்பானுடன் டிசம்பர் 2ஆம்  தேதி விளையாட உள்ளது.