துபாயில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த விளையாட்டு குறித்து நேற்று மகா கும்பமேளாவின் பிரபலமான ஐஐடி பாபா இந்தியா வெற்றி பெறாது, பாகிஸ்தான் தான் வெற்றி பெறும்.

எவ்வளவு முயற்சி செய்தாலும் கோலியாலும் கூட இந்தியாவை வெற்றி பெற செய்ய முடியாது என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, நெட்டிசன்கள் பலரும் அவரை சரமாரியாக விமர்சித்தனர். இந்நிலையில் தனது கணிப்பு தவறு என்று, சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்டுள்ளார்.