இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது..

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 23) நடைபெறுகிறது. ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றிகளுடன் தொடரையும் கைப்பற்றியது. தற்போது அயர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்துவதே இந்திய அணியின் இலக்கு. தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி டப்ளினில் உள்ள தி வில்லேஜில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

முதல் ஆட்டத்தில் தொடக்க ஜோடியைத் தவிர, இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மழை காரணமாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 185 ரன்கள் குவித்தது. எனவே ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு துணையாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, 3வது டி20 போட்டியிலும் இதேபோன்ற ஹிட் அடிப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கலாம்.

வானிலை எப்படி இருக்கும்?

தொடரின் முதல் போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் மழை பெய்யவில்லை, ஆனால் மேகங்கள் அடர்ந்திருந்தன. 3வது போட்டியில் மழை பெய்யுமா இல்லையா என்பது இப்போது தெரிந்துவிடும்.

Met office gov இணையதளத்தின்படி, ஆகஸ்ட் 23 புதன்கிழமை டப்ளினில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அயர்லாந்தில் நடைபெறும் ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5-6 மணிக்குள் மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. எனவே, 2வது இன்னிங்சில் மழை பெய்தால் ‘விளையாட்டு’தடைபடலாம்.. மழை வரக்கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பம்..

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய டி20 அணி :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான்.

டி20 தொடருக்கான அயர்லாந்து கிரிக்கெட் அணி :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் காம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்கரெல், ஃபியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொர்கோம், பென் ஒயிட் மற்றும் கிரேக் யங்.