ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 150 ரன்கள் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர், ஸ்டீவ் ஸ்மித்தை கோல்டன் டக்கில் வெளியேற்றினார்.

இவர் கோல்டன் டக்கில் வெளியேற்றிய ஒரே பவுலர் என்ற பேல் ஸ்டெய்னின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். முதல் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பும்ரா 7வது ஓவரை வீசினார். ஸ்மித்தை வந்த வேகத்திலேயே LBW-வில் வெளியேற்றினார். ஸ்மித் இதுவரை 196 விளையாடியுள்ளார். அதில் 11 முறை மட்டுமே டக் அவுட்டில் வெளியேறியுள்ளார். அதில் 2 கோல்டன் டக் என்பது குறிப்பிடத்தக்கது.