
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இதில் கே.எல்.ராகுலுக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு 2 ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஒருநாள் தொடரில் ஆர்.அஷ்வினுக்கு முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு முக்கியமானதாக இருக்கும். ஏனெனில், ஆசிய கோப்பையில் இருவருக்கும் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன் இரு வீரர்களுக்கும் முக்கியமானது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 இறுதிப் போட்டிகள் உள்ளன. அதன் பிறகுதான் உலகக் கோப்பையின் த்ரில் தொடங்கும்.
ஆர். அஸ்வினுக்கு வாய்ப்பு :
அக்சர் படேல் காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அக்ஷர் பட்டேலுக்கு காயம் கடுமையாக இருந்தால், இந்த இருவரில் ஒருவருக்கு உலகக் கோப்பைக்கான டிக்கெட் கிடைக்கலாம். ஆர் அஸ்வினின் அனுபவத்தை வைத்து இந்திய அணி அவருக்கு வாய்ப்பளிக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் எப்படி செயல்படுகிறார் என்பதை ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். அதே நேரத்தில் சஞ்சு சாம்சன், சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகளுக்கான இந்திய அணி :
கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர் அட்டவணை :
ஆசியக் கோப்பைக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 22ம் தேதி மொஹாலி மைதானத்தில் நடக்கிறது. அதன்பிறகு, செப்டம்பர் 24 மற்றும் 27-ம் தேதிகளில் இந்தூர் மற்றும் ராஜ்கோட் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்கு முந்தைய இந்த ஒருநாள் தொடர் மிக முக்கியமானது. இதனிடையே உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை செப்டம்பர் 30ஆம் தேதியும், இந்திய அணி நெதர்லாந்தை அக்டோபர் 3ஆம் தேதியும் எதிர்கொள்கிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி :
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுச்சென், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.
Squad for the 3rd & final ODI:
Rohit Sharma (C), Hardik Pandya, (Vice-captain), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, Suryakumar Yadav, KL Rahul (wicketkeeper), Ishan Kishan (wicketkeeper), Ravindra Jadeja, Shardul Thakur, Axar Patel*, Washington Sundar, Kuldeep Yadav, R…
— BCCI (@BCCI) September 18, 2023