ஏறக்குறைய 16 மணிநேரம் ஆனாலும், இன்னும் வலிப்பதாக சுப்மன் கில் வேதனை தெரிவித்துள்ளார்..

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வி கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை உடைத்தது. இது தவிர, தோல்வியின் சோகம் வீரர்களின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இன்ஸ்டாகிராமில் (புகைப்படத்துடன்) பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் தோல்விக்கு பிறகு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அனைத்து இந்திய வீரர்களும் சுப்மன் கில் பதிவில் காணப்படுகின்றனர்.

சுப்மன் கில் தனது பதிவில், ஏறக்குறைய 16 மணிநேரம் ஆனாலும், நேற்றிரவு (19ஆம் தேதி) நடந்தது இன்னும் வலிக்கிறது. சில நேரங்களில் எல்லாவற்றையும் கொடுத்தால் போதாது. நாங்கள் எங்களின் இறுதி இலக்கை அடையவில்லை, ஆனால் இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியும் எங்கள் அணியின் ஆவி மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாக உள்ளது. எங்கள் நம்பமுடியாத ரசிகர்களுக்கு, எங்களின் உயர்விலும் தாழ்ந்த நிலையிலும் உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்கு உலகம் என்று அர்த்தம். இது முடிவல்ல, நாம் வெற்றி பெறும் வரை இது முடிவதில்லை. ஜெய் ஹிந்த்” என தெரிவித்துள்ளார்..

அதாவது, எங்கள் ரசிகர்கள் எங்களுக்கு நிறைய ஆதரவளித்தனர், நாங்கள் வென்றாலும் அல்லது தோற்றாலும், உங்கள் ஆதரவு எங்களுக்கு நிறைய இருக்கிறது. ஆனால் இந்த தோல்விக்குப் பிறகு எல்லாம் முடியவில்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சுப்மான் கில்லின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தவிர, சமூக ஊடக பயனர்கள் தொடர்ந்துகமெண்டில்   தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த உலகக் கோப்பையில், சுப்மன் கில் அற்புதமான பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஆனால் இறுதிப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஓவரில் தேவையில்லாத ஷாட் ஆடி 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பியதாக விமர்சனம் எழுகிறது..