தெலுங்கானாவில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாராந்திர வேலை நேரம் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டபடி 48 மணி நேர வரம்பை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை அம்மாநில அரசின் தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின் முதன்மை செயலாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறைந்தது 6 மணி நேரத்திற்கு, வேலை நேரத்திற்கு இடையில் 30 நிமிடம் இடைவெளி வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர வேலை வாய்ப்பு என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதை பின்பற்றி தற்போது தெலுங்கானாவிலும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.