
தமிழக அமைச்சர் ராஜ கண்ணன் பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை அனுப்புவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 2019- 2020 ஆம் ஆண்டு 23 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பாலின் விற்பனை 7 லட்சம் லிட்டர் அதிகரித்து, தினம்தோறும் 30 லிட்டர் லட்சம் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் பால் உற்பத்தியாளர்களின் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு லிட்டருக்கு ரூபாய் 3 விதம் நேரடியாக அவரவர் வங்கி கணக்கிற்கு ஊக்கத்தொகை செலுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டப் பணியாக நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலமாக ஊக்கத்தொகை இந்த வாரம் முதல் பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஊக்கத்தொகை நடைமுறை செயல்படுத்தப்படும் இவ்வாறு கூறியுள்ளார்.