
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இக்கட்சி வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தெளிவான முறையில் கட்சியின் கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறார். மிக முக்கியமாக கட்சியின் விதிகளை வகுத்துள்ளார். அதிமுகவின் By- Law-வை எம்ஜிஆர் எப்படி வகுத்தாரோ, அதே பாணியை விஜய்யும் கடைப்பிடித்து இருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், கட்சி தொண்டர்களால் மட்டுமே தலைவரை தேர்வு செய்வது என்ற விதிகளை வகுத்திருக்கிறார்.