
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் காட்பாடி தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் தற்போது தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை சரியில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, காட்பாடி அருகே காங்கேயநல்லூர் பகுதிக்கு அருகே காந்திநகர் உள்ளது. இங்கு பல்வேறு பணிகளுக்காக சாலைகள் கொத்தி கொத்தி போடப்பட்டுள்ளது.
சிமெண்ட் சாலையாக மாற்றுகிறேன் என்று கூறி எல்லா இடங்களிலும் சாலைகளை கொத்தி கொத்தி போட்டுள்ளார்கள். அதில் வருபவர்கள் தத்தி தத்தி வருகிறார்கள். எனக்கு 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் இருக்கிறது. என்னுடைய 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் உங்கள் தொகுதியில் சாலை கூட சரியில்லை என்று யாராவது கூறினால் அதைவிட அசிங்கம் எனக்கு வேறு எதுவுமே கிடையாது என்று கூறினார். மேலும் அமைச்சர் பதவியில் இருக்கும் துரைமுருகன் சாலை சரியில்லை என்று கூறியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.