
பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரது நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு SPB என்று பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டனர். அவர் அந்த சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.