2024 மக்களவைத் தேர்தல் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சசி கரூர் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல தற்போது வெற்றி பெற முடியாது என கூறினார். காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உள்ளதால் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவு இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரு மக்களவைத் தேர்தலிலும் பாஜக 31 சதவீதம் மற்றும் 37 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்று சசி தரூர் எதிர்க்கட்சிகள் பிரிந்து தனித்தனியாக இருந்ததால் அதே பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது என குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அப்போது தான் பாஜகவின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் எனவும் அவர் கூறினார். மேலும் பாஜகவுக்கு எதிராக அதிருப்தி நாட்டில் காணப்படுவதால் அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.