குஜராத் அரசு தற்போது குஜராத் பொது தேர்வு 2023 என்ற புதிய மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் மாநிலங்களால் தயாரிக்கப்படும் வினாத்தாள்கள் லீக்காவதை தடுப்பது ஆகும். இந்நிலையில் இந்த புதிய மசோதாவின் படி வினாத்தாள்கள் கசிந்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் போன்றவைகள் விதிக்கப்படும்.

அதோடு தேர்வு முறை கேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 2 வருடங்கள் எந்த ஒரு பொது தேர்விலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.