
செல்போன் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. இதனால் திடீரென செல்போன் தொலைந்து விட்டால் ஒருவித பதற்றமும் பயமும் ஏற்படும். ஆனால் அமைதியாக எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் பண இழப்பு, தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பின்மை போன்றவை ஏற்படும். உங்களது செல்போன் திருடப்பட்டு விட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்க வேண்டும்.
சட்டரீதியாக முதலில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் செல்போன் மீட்பிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனுடன் CEIR இணையதளத்தில் உங்களது சாதனத்தை பதிவு செய்து அதன் செயல்பாட்டை பிளாக் செய்ய வேண்டும். இதன்மூலம் தொலைந்த செல்போனின் IMEI எண்ணை பதிவு செய்து அந்த சாதனத்தில் எந்த ஒரு புதிய சிம்மையும் பயன்படுத்த முடியாமல் செய்ய முடியும். இதனை அடுத்து செல்போன்களில் உள்ள தனிநபர் தகவல்கள் திருடப்படாமல் இருப்பதற்காக முக்கியமான அப்ளிகேஷன்களுக்கு லாக்குகள் பயன்படுத்த வேண்டும்.
WHATSAPP மற்றும் யுபிஐ போன்றவற்றில் லாக் வசதியை பயன்படுத்தி தகவல்கள் பகிரப்படாமல் இருக்க டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் மூலம் கூடுதல் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இதனை அடுத்து செல்போன் திருடப்பட்ட உடன் உடனடியாக UPIயை மற்றும் பேமெண்ட் செயல்களில் இருந்து வெளியேறி தாங்கள் பயன்பாட்டில் உள்ள வங்கிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதனால் சட்டவிரோதமாக வங்கி கணக்குகளில் இருந்து பணப்பரிவர்த்தனை நடைபெறாமல் பாதுகாக்க முடியும்.
இதனை அடுத்து முக்கியமான சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை உடனே மாற்ற வேண்டும். மேலும் WHATSAPP, GMAIL போன்றவற்றிலிருந்து வெளியேற LOGOUT செய்ய வேண்டும். இதனை அடுத்து Google’s “find my device” அல்லது “find my iPhone”மூலம் ரிமோட் பைப் செய்து செல்போன்களின் அனைத்து தகவல்களையும் நீக்க வேண்டும். இவை தனிப்பட்ட தகவல்கள், மற்றும் நடவடிக்கைகளை தவறாக பயன்படுத்தாமல் தவிர்க்க உதவும்.