ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதான இசாமு டோமியோகா, தனது பள்ளி நண்பரின் தாயை மணந்து, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

54 வயதான மிடோரி, சமீபத்தில் கணவரிடம் இருந்து பிரிந்து தனது மகனுடனும், பேரக்குழந்தைகளும் இணைந்து வசித்து வந்துள்ளார். சில வருடங்களுக்குப் பிறகு தற்செயலாக சந்தித்த இசாமுக்கும் ,மிடோரிக்கும் முதலில் சாதாரண பரஸ்பர அனுதாபமாக தொடங்கியது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டதற்குப் பிறகு காதலாக மாறியது.

மகனுக்குத் தெரியாமல் இவர்கள் இருவரும் உறவைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில், மிடோரியை திருமணம் செய்யும் ஆசையை இசாமு வெளிப்படுத்த, தொடக்கத்தில் தயங்கிய மிடோரி பின்னர் ஓரளவு மனதை மாற்றிக் கொண்டு ஒப்புதலளித்தார்.

இசாமு–மிடோரி ஜோடி திருமணம் செய்ய முடிவெடுத்ததும், இது இருவரின் குடும்பத்தினரிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மிடோரியின் மகனும், இசாமுவின் பெற்றோர்களும் இந்த முடிவுக்கு கடுமையாக எதிர்த்தனர். “அவருக்கு ஏற்கனவே 54 வயது, குழந்தைகள் கூட பெற முடியாத நிலை… உனக்கு 33 வயது தான். இது பொருத்தமற்றது” என்றும்,

வயது வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டியும் பல வாதங்கள் வந்தன. ஆனால், காதல் ஜோடியின் மனதை மாற்ற இயலவில்லை. இறுதியாக, மிடோரியின் மகன் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

காதலுக்கு கண் இல்லை என்பதே உண்மைதான்; ஆனால் இப்போது காதலுக்கு கண் மட்டுமல்ல, வயதும், உறவினைத் தேடும் பார்வையும் பன்மடங்கு மாறி விட்டதா என்ற வாசகர்களின் கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.