செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருவண்ணாமலைல போயி அந்த சிப்காட் தொழிற்சாலை திறக்கிறேன் என  சொல்ற… 3000 ஏக்கர் எடுக்கறேன் என சொல்லுற…   திறக்க போற முதலாளி யாரு ? யோவ்… என் நிலத்தை கொடுய்யா…. நானே முதலாளி…. நானே தொழிலாளியா….  நான் தற்சார்பு வாழ்க்கை.

உன் தொழிற்சாலையில் என்ன வரும்? வேலை வருது. வேலை எனக்கு குடுப்பியானு தெரியாது,  வேலை வருது. அதுக்கு வரும்  சம்பளத்தை வைத்துவிட்டு, நீ  என்ன செய்வ ? நல்லா சாப்பிடுவ….  சாப்பாடு  எங்கிருந்து வரும் ? ஒரு அடிப்படை அறிவு தானே….

கடலூரில் இல்லாத சிப்காட்டா ? கடலூர் வளர்த்திருச்சா ? கடலூரில் இல்லாத சிப்காட் தொழிற்சாலையால் இந்த நாடும், நாட்டு மக்களும் அரை அங்குலம் வளர்ந்தது காட்டு,  மொத்த இடத்தையும் எடுத்துக்கோ. எப்படி கட்டமைக்கிறீங்க பாருங்க ? வளர்ச்சின்னு பேசும்போது…. காதுல  இனிக்குது…. வாயில தேனை ஊத்துனா சப்பி சாப்பிடலாம்….  காதுல ஊத்துனா என்ன பண்ணலாம் ? என கேள்வி எழுப்பினார்.