பொதுவாக வீடுகளில் எறும்பு தொல்லையை போக்குவதற்கு எறும்பு சாக்பீஸ் மற்றும் எறும்பு பொடி போன்றவற்றை தான் பயன்படுத்துவோம். வீட்டில் குழந்தைகள் இருந்தால் கெமிக்கல் பொடியை பயன்படுத்துவது சற்று பயம். இதனால் இயற்கையான முறையில் எறும்புகளை எப்படி விரட்டலாம் என்பது குறித்த சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம். அதன்படி கருப்பு மற்றும் சிவப்பு மிளகுத்தூளை எறும்பு வரும் இடத்தில் போட்டால் எறும்புகள் வராது. அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டிலில் புதினா எண்ணெய்யை 10 முதல் 20 சொட்டு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கலந்த பிறகு எறும்பு வரும் இடத்தில் தெளித்தால் புதினாவின் நறுமணத்தால் எறும்புகள் வராது.

ஒரு பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டிலில் 5 அல்லது 10 சொட்டு ட்ரீ ஆயிலை எடுத்துக்கொண்டு அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால் எறும்புகள் வராது. லெமன் யூக்கலிப்டஸ் எண்ணையை ஒரு பஞ்சில் நனைத்து எறும்புகள் வரும் இடத்தில் வைக்கலாம். இதனால் எறும்புகள் வராது. ஒயிட் வினிகருடன் சம அளவு தண்ணீரை கலந்து எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைத்தால் எறும்புகள் வராது. வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றலாம். கொதிக்கும் தண்ணீரால் எறும்புகள் அழிந்து விடும். மேலும் காபி பொடியின் நறுமணத்திற்கும் எறும்புகள் வராது என்பதால் எறும்புகள் வரும் இடத்தில் அதை தூவினால் எறும்பு வருவதை தடுக்கலாம்.