
இன்றைய இளம் தலைமுறையினர்கள் ஆடைகள், தலைமுடி, தாடி போன்றவற்றில் பல ஸ்டைல்களை பின்பற்றுகின்றனர். முந்தைய காலங்களில் திருமண நிகழ்வுகளின் போது மணமகன் தாடி முழுவதையும் எடுத்துவிட்டு நிகழ்வில் கலந்து கொள்வார்.
ஆனால் இப்போது திருமண நிகழ்வில் மணமகன் தாடி வைப்பது இன்றைய காலத்து பேஷன் ஆகவே மாறிவிட்டது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மேடு மீனவர் கிராம மக்கள் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
அதாவது திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவில் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என அதிரடியான முடிவை கூறியுள்ளனர்.
மேலும் மணமகன் தாடி வைத்திருப்பது மணமகளுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர் விருப்பத்தில் தலையிடுவது குறித்து உள்ளூர் இளைஞர்களிடம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.