தீபாவளி ரிலீஸ் இல் பல படங்கள் வெளியாகின. இதைப் போன்று தீபாவளி அன்று “கா” படம் திரைக்கு வந்தது. சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடிப்பில் “கா” படம் உருவாகியது. இந்தப் படத்தில் தன்வி ராம் மற்றும் நயன் சரிகா நடிகைகளாக நடித்துள்ளனர். சுதீப் மற்றும் சுஜித் இயக்கும் முதல் படம் இதுவாகும். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகசைதன்யா கலந்து கொண்டார். இதில் பேசிய கிரண் கூறியதாவது, எனக்கும் வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என உள்ளன.
என்னுடைய எல்லா படங்களும் வெற்றி பெறும் என உத்தரவாதம் கிடையாது. ஆனால் எல்லா படங்களிலும் என்னால் முடிந்த அளவு உழைப்பை கொடுப்பேன் என உத்தரவாதம் கூற முடியும். “கா” படம் தோல்வியை தழுவினால் நான் சினிமாவை விட்டு விலகி விடுகிறேன் என அந்த நிகழ்வில் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் தீபாவளி அன்று படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவர் கூறிய சவாலில் ஜெயித்து விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.