கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமையா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது. இரண்டு ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி நிறைவான நிலையில், தற்போது முதல் மந்திரி மாற்றம் குறித்த பேச்சு புயலை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சிவக்குமாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் எம்எல்ஏ இக்பால் ஹுசேன், கர்நாடகாவின் முதல் மந்திரியாக இன்னும் 2,3 மாதங்களில் டி கே சிவக்குமார் பதவியேற்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். ஆனால் சித்திராமையா தனது 5 ஆண்டுகள் ஆண்டு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்வார் என்று அவரது மகன் கூறினார். இதனால் கர்நாடகா அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 5 ஆண்டுகளுக்கும் நான் முழுமையாக பதவியில் இருப்பேன் என்று உறுதிப்பட கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சி  ஒற்றுமையாக இருக்கிறது. காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறை போல் உறுதியாக ஆட்சியில் இருக்கும். நான் ஆட்சியில் இருப்பேன் உங்களுக்கு ஏன் சந்தேகம்? என்று கேள்வி எழுப்பினார்.