
தமிழக பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய பெரிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் குறைபாடுகளை சரிசெய்து, கட்சியை தமிழகம் முழுவதும் வளர்த்தெடுக்கும் வகையில் மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். பல போராட்ட அறிவிப்பு வெளியிட்டார்.
குறிப்பாக அண்ணாமலையில் செயல்பாடுகளால் மேல்மட்ட தலைவர்களோடு மோதல் போக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிரான செயல்பாடுகளும் கட்சிக்குள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே அண்டை மாநில பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தபோதிலும் அவர் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் அடுத்தடுத்து கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்து வந்தார். இதனால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட காயத்ரி ரகுராம் அண்ணாமலை அண்ணாமலைக்கு எதிராக நேரடியாக மோதல் போக்கில் ஈடுபட தொடங்கி உள்ளார்.
அண்ணாமலை ஏதேனும் கருத்து சொன்னாலும் சரி, ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டாலும் சரி, ஏதேனும் முடிவெடுத்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வரும் அவர் தமிழக அரசியல் சூழல், நிலவரம் தொடர்பான கருத்துக்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் குமரியில் பாஜக வலுவான இடத்தைப் பிடிக்கும். பொன் ராதாகிருஷ்ணன் அய்யாவும், எம் ஆர் காந்தி அய்யாவும் தான் காரணம். குமரி எப்போதும் உங்கள் கோட்டம். குமரியில் பாஜகவுக்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்தது. நான் இதை விட இரண்டு மடங்கு பார்த்தேன். குமரி பாஜகவின் கோட்டம். அண்ணாமலைக்கு மற்றவர்களின் மீது சவாரி செய்வது பெரிய விஷயமல்ல. ஆனால் அவரால் அவரது சொந்த ஊர், கொங்கு மண்டலமான அரவக்குறிச்சியில் கூட்டத்தை இழுக்க முடியவில்லை. .
தமிழகத்தில் குமரியில் பாஜக வலுவான இடத்தைப் பிடிக்கும். பொன் ராதாகிருஷ்ணன் அய்யாவும், எம் ஆர் காந்தி அய்யாவும் தான் காரணம். குமரி எப்போதும் உங்கள் கோட்டம். குமரியில் பாஜகவுக்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்தது. நான் இதை விட இரண்டு மடங்கு பார்த்தேன். குமரி பாஜகவின் கோட்டம்.… https://t.co/ehGXUtxcf9
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) July 2, 2023