
மும்பையில் அமெரிக்க சுற்றுலா பயணி மற்றும் யூடியுபரான கிறிஸ் ரொட்ரிகஸ் என்பவர் சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த போது பாபு என்னும் காலனி சுத்தம் செய்யும் ஒருவரை சந்தித்தார். அந்த நபர் இவருடைய ஷூவை சுத்தம் செய்து தருவதாக கூறிய நிலையில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஜெய்ப்பூரில் இருந்து வேலை தேடி மும்பைக்கு வந்த நிலையில் வேலை கிடைக்காததால் தெருவில் வாழ்வதாகவும், ஒரு நாளுக்கு ரூ.30-40 மட்டுமே கிடைப்பதால் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் பாபு கூறினார்.
அவர் கூறியதை கேட்டு வருத்தமடைந்த கிறிஷ் தன்னுடைய ஷூவை அவரிடம் பாலிஷ் செய்ய கொடுத்தார். அப்போது மிகவும் சுத்தமாக பாலிஷ் செய்ததற்காக பாபு ரூ. 10 பணம் கேட்டார். இதனை கேட்ட கிறிஸ் அவருக்கு ஷூ பாக்ஸ் வாங்க உதவி செய்வதற்காக ரூ. 2000 கொடுத்துவிட்டு உண்மையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், மறுநாள் திரும்ப வருவேன்” என்றும் கூறிவிட்டு சென்றார். மறுநாள் மீண்டும் அதே இடத்திற்கு கிறிஸ் சென்றபோது அங்கிருந்த பாபுவிடம் ஷூ பாக்ஸ் எங்கே என்று கேட்டதற்கு பாபு காரணம் சொல்லாமல் தவித்து வந்தார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
அப்போது அருகே இருந்த தேங்காய் விற்பவர் ஒருவர் “இது இவரின் வழக்கமான நாடகம், பலரிடம் இப்படித்தான் செய்கிறார்” என்ற உண்மையை கூறினார். இதைத் தொடர்ந்து கிறிஸ் instagram வீடியோவில் “ஒரு மனிதரை நம்பியதை விட தர்மத்தை நம்பியதில் தான் ஏமாற்றம் ஏற்பட்டது” என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.