உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் கடந்த வருடம் பிரபல சமூக வலைதளமான twitter நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குள் வழக்குகள் மற்றும் நீதிமன்றம் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார் மஸ்க். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு எலான் மஸ்க் அளித்த பேட்டியின் போது தான் twitter நிறுவனத்தை வாங்கி மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி பெரிய தவறு செய்து விட்டேன். எனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அலுவலகத்திலேயே தூங்கி விடுகிறேன்.

twitter நிறுவனத்தை வாங்கியது தவறு என்றாலும் அந்த நிறுவனத்தில் பணி புரிவது போர் அடிக்கவில்லை. twitter நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 8000-ல் 1500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நான் டுவிட்டருக்கு தலைமை வகித்த காலத்தில் நிறைய தவறுகளை செய்து விட்டேன். ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது நல்ல நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் twitter நிறுவனத்தை தற்போது நான் விற்பதற்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் அதே 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை விற்க மாட்டேன் என மஸ்க் கூறியுள்ளார்.