நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம், அவர் என்ன ஆரியப்படை தலைவரா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக பணம் இருந்தால் தான் வேலை செய்யும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் தாவெக-வால் நாதகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான் கூறியதாவது, என்னை எதிர்க்கும் அனைவரும் எனக்கு எதிரி அல்ல. ஆயிரம் தான் இருந்தாலும் விஜய் என்னுடைய தம்பி. நான் யாரை எதிர்க்கிறானோ அவர்கள் தான் என்னுடைய எதிரிகள். நான் கருவில் இருக்கும் போதே எதிரியை குறித்துக் கொண்டு பிறந்தவன் நான், அது ஏற்கனவே Fixed  என்று கூறினார்.