செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி நமக்கு சேர வேண்டிய தண்ணீரை ஜூன் மாசத்துல கர்நாடகா கொடுக்கல. ஆகையால் காவேரி மேலாண்மை வாரியம் …. கர்நாடகத்துக்கு உத்தரவு போடணும். கர்நாடகாவுக்கு நான் என்ன சொல்லுறது… உச்சநீதிமன்றம் சொன்னப்படி செய்யுங்கன்னு சொல்லுறோம்.

தண்ணீர் தராததுக்கு கர்நாடகா அரசு அவுங்க காரணத்தை சொல்லுது, தண்ணீர் தேவை என்பதற்கு நான் தமிழக காரணத்தை சொல்லுறேன். ஜூன் மாசம் நமக்கு வந்து 9.19 டிஎம்சி கொடுத்திருக்கணும். ஆனால் 2.833 டிஎம்சி தான் வந்து இருக்கு. இன்னும் 6.357 டிஎம்சி தண்ணீர் தரணும் என தெரிவித்தார்.

திட்டமிட்டபடி பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்குமா ? என்ற கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் அதெல்லாம் எனக்கு தெரியாது என்று பதில் அளித்தார். மேட்டூர் அணை திறந்து விட்டு தண்ணீர்  கடைமடைவரை செல்லவில்லை என்று எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அமைச்சர், தண்ணி போய்க் கொண்டிருக்கின்றது.  கடமடை விவகாரம் அவருக்கு தெரியவில்லை என்று பதிலளித்தார்.

பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசயத்துல சென்னைஉயர்நீதிமன்றம் மாறுபட்ட கருத்து கொடுத்தது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டதற்கு…  என் விஷயம் கேட்டீங்க இல்ல…. ஆள விடுங்க என்று தெரிவித்து கிளம்பினார்.