மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து பேசிய அவர், இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மாதந்தோறும் இத்தொகை வழங்கப்படும் என்றும் கூறிய அவர், 1 கோடி மகளிருக்கு 1000 வழங்கப்படும் என்றும் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் பெறவேண்டும் எனவும் கூறினார்.