
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்கும் 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆகும். இந்த ஏலத்தில் பஞ்சாபி சேர்ந்த இளம்வீரர் நமன்தீரை மும்பை இந்தியன்ஸ் அணி ₹5.20 கோடிக்கு எடுத்தது. சென்ற முறை நடந்த போட்டியிலும் மும்பை அணியின் வீரராக நமன் தீர் விளையாடினார். அப்பொழுது மிகவும் சிறப்பாக விளையாடியதால் இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியினரால் வாங்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நமன் தீர் கூறியதாவது, இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அப்பொழுது கனடாவிற்கு என்னுடைய அக்கா வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்தேன். ஆனால் எனது தந்தை தான் இன்னும் ஒரு வருடம் முயற்சி செய்து பார் என கூறினார். அப்பொழுதுதான் எனக்கு ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு அமைந்தது.
அந்தப் போட்டியில் விளையாடிய பின் அதற்கு அடுத்த ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி என்னை ஏலத்தில் எடுத்தது. அதன் பின் என் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. அதேபோன்று இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த முறை நிச்சயமாக எனது திறமையை விளையாட்டில் முழுவதுமாக காட்டி இந்திய அணியிலும் இடம் பிடிக்க விரும்புகிறேன் என கூறினார்.